இந்த வாரம் இதை எல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோங்க… பங்குச் சந்தை நிபுணர்கள் தகவல்

 

இந்த வாரம் இதை எல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோங்க… பங்குச் சந்தை நிபுணர்கள் தகவல்

நிறுவனங்களின் நிதி முடிவுகள், பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு போன்றவை இந்த வார பங்கு வர்த்தக்த்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கோடக் மகிந்திரா வங்கி, எல் அண்டு டி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி இந்தியா, டைட்டன் கம்பெனி, ஆக்சிஸ் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு வாரத்துக்கு வாரம் குறைந்து வருகிறது. பங்குச் சந்தைகளுக்கு சாதகமான அம்சமாகும்.

இந்த வாரம் இதை எல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோங்க… பங்குச் சந்தை நிபுணர்கள் தகவல்
கோடக் மகிந்திரா வங்கி

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்காவில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் அந்நாட்டில் ஜனநாயக கட்சிக்கு ஆட்சிக்கு வந்தால் பெரிய ஊக்குவிப்பு தொகுப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் அமெரிக்க நிலவரத்தை உலகம் முழுவதும் எதிர்பார்க்கின்றனர். அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து முதலீட்டை அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் இதை எல்லாம் கொஞ்சம் பார்த்துக்கோங்க… பங்குச் சந்தை நிபுணர்கள் தகவல்
அமெரிக்க அதிபர் தேர்தல்

கடந்த செப்டம்பர் மாத முக்கிய 8 துறைகள் உற்பத்தி, நிதிப்பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியிடும். வரும் வியாழன் இந்த மாதத்தின் கடைசி வியாழன் என்பதால் அன்று அக்டோபர் மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிக்கப்படும். அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதார சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை வெளியிடுகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.