தொடர்ந்து 2வது மாதமாக ரூ.1 லட்சம் கோடி கொடுத்த ஜி.எஸ்.டி…. நிம்மதி பெருமூச்சு விடும் மத்திய அரசு…

தொடர்ந்து 2வது மாதமாக ரூ.1 லட்சம் கோடி கொடுத்த ஜி.எஸ்.டி…. நிம்மதி பெருமூச்சு விடும் மத்திய அரசு…

தொடர்ந்து 2வது மாதமாக கடந்த நவம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனால் கடந்த ஏப்ரல் முதல் கடந்த செப்டம்பர் வரை ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் நிலவரம் மிகவும் மோசமாக இருந்தது. நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்த பிறகே ஜி.எஸ்.டி. வருவாய் அதிகரிக்க தொடங்கியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த அக்டோபரில் ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.

தொடர்ந்து 2வது மாதமாக ரூ.1 லட்சம் கோடி கொடுத்த ஜி.எஸ்.டி…. நிம்மதி பெருமூச்சு விடும் மத்திய அரசு…
ஜி.எஸ்.டி.

இந்நிலையில் தொடர்ந்து 2வது மாதமாக கடந்த நவம்பரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. 2020 நவம்பரில் ஜி.எஸ்.டி. வருவாயாக ரூ.1,04,963 கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 1.4 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் 2020 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டால் கடந்த நவம்பர் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.192 கோடி குறைவாகும்.

தொடர்ந்து 2வது மாதமாக ரூ.1 லட்சம் கோடி கொடுத்த ஜி.எஸ்.டி…. நிம்மதி பெருமூச்சு விடும் மத்திய அரசு…
ஜி.எஸ்.டி.

கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான ஜி.எஸ்.டி. வசூல்
ஏப்ரல் ரூ.32,172 கோடி
மே ரூ.62,151 கோடி
ஜூன் ரூ.90,917 கோடி
ஜூலை ரூ.87,422 கோடி
ஆகஸ்ட் ரூ.86,499 கோடி
செப்டம்பர் ரூ.95,480 கோடி
அக்டோபர் ரூ.1,05,155 கோடி
நவம்பர் ரூ.1,04,963 கோடி