20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு

 

20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இனியாவது பெற்றாக வேண்டும் என்று பாமக இன்று முதல் தொடர் போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

சென்னையில் நடந்த முதல் நாள் போராட்டத்தின் போதே பொதுமக்களுக்கு இடையூறாக பாமக நடந்துகொண்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் எழுந்துள்ளன.

20 எம்.எல்.ஏ. சீட்டுக்காக கல்வீச்சு போராட்டம்…பாமக மீது எழுத்தாளர் கடும் தாக்கு

போலீசாரின் கட்டுப்பாட்டினை மீறி, சாலையில் மறியல் போராட்டம் செய்தது, ரயில் மீது கற்களை வீசியது என்று பாமகவின் செய்த செயலால் பொதுமக்களும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். இதனால் சென்னையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இட ஒதுக்கீடு போராட்டம் தொடர்பாக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்தார் அன்புமணி.

இந்நிலையில் இன்று நடந்த கல்வீச்சுப் போராட்டம் 20% இடஒதுக்கீட்டுக்காக நடந்ததல்ல; 20 MLA சீட்டுக்காக நடந்தது என்று எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான வே.மதிமாறன் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.