வரும் வாரம் பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்… பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

ஈகை பெருநாளை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெறும். எச்.டி.எப்.சி., தாபர், சன்பார்மா, லுப்பின் மற்றும் டி.வி.எஸ். மோட்டார் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வரும் வாரம் வெளிவர உள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று முக்கிய கடனுக்கான வட்டி குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் இது சந்தைக்கு பெரிதும் உதவாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கொரோனா வைரஸ்

அமெரிக்கா-சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் ஹாங்காங் தொடர்பான புதிய சீன சட்டம், அமெரிக்கா-சீனா இடையிலான பதற்றங்களின் ப்ளாஷ் பாயிண்டாக மாறிவிட்டது. ஹாங்காங் மக்களின் அதிக உரிமைகளை பறிக்க சீனாவின் புதிய சட்டம் முன்மொழிகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாபர் நிறுவனம்

நாளுக்கு நாள் நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாளை முதல் உள்நாட்டில் விமான போக்குவரத்து சேவைகள் தொடங்க உள்ளது. வரும் வியாழக்கிழமையன்று மே மாத பங்கு முன்பேர வர்த்தக கணக்குள் முடிக்கப்படும். இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு மற்றும் உலக மற்றும் உள்நாட்டு அரசியல் நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Most Popular

’கொரோனா வைரஸை ஒழிக்க முடியாது. ஆனால்…’ என்ன சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 13 லட்சத்து  54 ஆயிரத்து 689 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 5 நாட்களுக்குள் 13 லட்சம் அதிகரித்து விட்டது. கொரோனா நோய்த்...

“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...

அரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...

5 நாள் கடந்தும் கண் விழிக்காத பிரணாப்! – தீவிரமாக கண்காணித்து வருதாக மருத்துவமனை தகவல்

மூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட...
Do NOT follow this link or you will be banned from the site!