இந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.99 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிவு..

இந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.99 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிவு..

இந்த வாரத்தில் கடந்த 5 வர்த்தக தினங்களில் 3 நாட்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் இந்த வாரத்தின் முதல் வர்ததக தினமான கடந்த திங்கட்கிழமையும், நேற்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உரிமை பங்கு வெளியீடு இந்த வாரம் தொடங்கியது. இந்த நிதியாண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் என்ற ரிசர்வ் வங்கியின் மதிப்பீடு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.99 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிவு..

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.121.63 லட்சம் கோடியாக குறைந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழயைன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.122.62 லட்சம் கோடியாக உயர்ந்து இருந்தது. ஆக, இந்த வாரத்தில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் ரூ.99 ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்தனர்.

இந்த வாரம் பங்குச் சந்தையில் ரூ.99 ஆயிரம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 425 புள்ளிகள் சரிவு..

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 425.14 புள்ளிகள் வீழ்ந்து 30,672.59 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 97.60 புள்ளிகள் இறங்கி 9,039.25 புள்ளிகளில் முடிவுற்றது.