கோவிட்-19 உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கோவிட்-19 உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

அமெரிக்காக, சீனா இடையிலான மோதல் போக்கு நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமையன்று வாரத்துக்கு 2 சீன பயணிகள் விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தார். சீனாவில் அதிக சர்வதேச விமானங்கள் இயக்க அனுமதி அளிக்கப்படும் என சீனா தெரிவித்த பிறகுதான் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அமெரிக்கா-சீனா இடையிலான பதற்றம் அதிகரித்தாலும், குறைந்தாலும் அது பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படும்.

கோவிட்-19 உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

இந்த வாரம் டைட்டன், பாம்பே டையிங், பி.வி.ஆர்., ஹீரோமோட்டோகார்ப் உள்பட பல பிரபல நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிடுகின்றன. நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தற்சமயம் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நம் நாடு 6வது இடத்தில் உள்ளது. இன்று முதல் ஷாப்பிங் சென்டர்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட உள்ளன.

கோவிட்-19 உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. நிபுணர்கள் கணிப்பு

கடந்த ஏப்ரல மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளவிவரம், கடந்த மே மாத சில்லரை விலை பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய பொருளாதார புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளிவருகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் 2 நாள் கூட்டம் புதன்கிழமையன்று முடிவடையும். ஜியோவுக்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 7வது ஒப்பந்தம் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களை பொறுத்து இந்த வாரத்தில் பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கம் அமையும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.