5 நாளில் ரூ.8.38 லட்சம் கோடி அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,863 புள்ளிகள் உயர்ந்தது…

5 நாளில் ரூ.8.38 லட்சம் கோடி அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,863 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தில் வர்த்தகம் நடைபெற்ற கடந்த 5 தினங்களில் 4 நாட்கள் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சில முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது மற்றும் இந்திய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவது போன்ற காரணங்களால் இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சிறப்பாக இருந்தது.

5 நாளில் ரூ.8.38 லட்சம் கோடி அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,863 புள்ளிகள் உயர்ந்தது…

கடந்த 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.135.47 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.127.09 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.8.38 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

5 நாளில் ரூ.8.38 லட்சம் கோடி அள்ளிய முதலீட்டாளர்கள்…. சென்செக்ஸ் 1,863 புள்ளிகள் உயர்ந்தது…

நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,863.04 புள்ளிகள் உயர்ந்து 34,287.24 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 561.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,142.15 புள்ளிகளில் முடிவுற்றது.