முதலீட்டாளர்கள் இன்றும் குஷி! ரூ.2.17 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்கு வர்த்தகம்…

முதலீட்டாளர்கள் இன்றும் குஷி! ரூ.2.17 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்கு வர்த்தகம்…

இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நேற்று நடைபெற்ற 11 மணி நேர பேச்சுவார்த்தை முடிவில், லடாக்கின் பிரிக்சன் பாயிண்டில் இரு தரப்பும் படைகளை விலக்கி கொள்ள ஒப்புக்கொண்டன. இதனால் இந்திய-சீன எல்லையில் பதற்றம் தணிய தொடங்கியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே ஏற்றம் கண்டது போன்ற பல காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது.

முதலீட்டாளர்கள் இன்றும் குஷி! ரூ.2.17 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்கு வர்த்தகம்…

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்டு டி, இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், என்.டி.பி.சி., பவர்கிரிட், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 27 நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல் மற்றும் மாருதி சுசுகி இந்தியா ஆகிய 3 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

முதலீட்டாளர்கள் இன்றும் குஷி! ரூ.2.17 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்கு வர்த்தகம்…

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,963 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 759 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.23 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று ஒரே நாளில் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.17 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்கள் இன்றும் குஷி! ரூ.2.17 லட்சம் கோடி லாபம் கொடுத்த பங்கு வர்த்தகம்…

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 519.11 புள்ளிகள் உயர்ந்து 35,430.43 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 159.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,471.00 புள்ளிகளில் முடிவுற்றது.