முதலீட்டாளர்களுக்கு ரூ.2.04 லட்சம் கோடி லாபம்… சென்செக்ஸ் 524 புள்ளிகள் உயர்ந்தது….

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் வர்த்தகத்தில் சிறிய சரிவு ஏற்பட்டாலும் பின்னர் பங்கு வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் கண்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டது. முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் பல நிறுவனங்களின்  பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரீட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஐ.டி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ் மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. என்.டி.பி.சி. நிறுவன பங்கு விலை எந்தமாற்றமும் இன்றி முடிவடைந்தது.

இண்டஸ்இந்த் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,778 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 870 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.137.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.01 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 523.68 புள்ளிகள் உயர்ந்து 34,731.73 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 152.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,244.40 புள்ளிகளில் முடிவுற்றது.

Most Popular

ராஜஸ்தானில் இருந்த இரவில் காரில் வந்த அபின்… மதிப்பு ரூ.15 லட்சம்… சிக்கிய பாஜக நிர்வாகி

போதைப்பொருளை கடத்தியதாக பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அக்கட்சினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்....

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும்” : துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி திட்டவட்டம்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அலையே இன்னும் ஓயாத நிலையில் பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி கூறியிருப்பது அடுத்தகட்ட பரபரப்பை...

“ஒரு ரூபாய வச்சி ஓவர் நைட்ல பணக்காரன் ஆகுற ஹீரோ மாதிரி, 5 ரூபாய் இருந்தா நீங்களும் பணக்காரர்தான்” – எப்படியா?இப்படித்தான் படிங்க ..

பழைய பொருட்களை விற்கும் சில வெப்சைட்டுகளிடம் பழைய ஐந்து ரூபாய் கொடுத்தால் நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம் . உங்ககிட்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டு ,அதுவும் 786 அப்படின்னு எண் முடியற மாதிரி இருக்கணும்...

திருவள்ளூரில் 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கூடி வருகிறது. கொரோனா வைரஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!