வரும் வாரத்தில் எவை எவை பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு…..

வரும் வாரத்தில் எவை எவை பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு…..

டாடா மோட்டார்ஸ், இப்கா லேப்ஸ், பைசர், எச்.பி.சி.எல்., ஜே.கே. சிமெண்ட் மற்றும் முத்தூட் பைனான்ஸ், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் உள்பட பிரபலமான நிறுவனங்கள் தங்களது மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிடுகின்றன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாளை தனது உரிமை பங்கு வெளியீடு பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிட உள்ளது. ஜியோ பங்கு விற்பனை வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.1.04 லட்சம் கோடிக்கு மேல் திரட்டியுள்ளது. இதனை தனது கடனை அடைக்க ரிலையன்ஸ் பயன்படுத்த உள்ளது.

வரும் வாரத்தில் எவை எவை பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு…..

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் பாதிப்பு உச்சத்தை தொடவில்லை என தகவல். அதேசமயம் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும் என அதிகார அமைப்புகள் பயப்படுகின்றனர். இன்று கடந்த மே மாத மொத்த விலை பணவீக்கம், வங்கிகளின் திரட்டிய டெபாசிட், வழங்கிய கடன் குறித்த விவரம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளிவருகிறது.

வரும் வாரத்தில் எவை எவை பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு…..

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில், நிலுவை தொகையை எப்படி திரும்ப செலுத்த போகின்றன என்பது குறித்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் செயல்திட்டத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வரும் 17ம் தேதியன்று, கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக கடனை திரும்ப செலுத்த காலஅவகாசம் வழங்கப்பட்ட காலத்தில் வட்டியை தள்ளுபடி செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான அடுத்த கட்ட விசாரணை நடைபெற உள்ளது.

வரும் வாரத்தில் எவை எவை பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்…. பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு…..

அமெரிக்கா எச்1- பி விசாக்களை முடக்கும் எண்ணத்தில் உள்ளதாக தகவல். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் நிலவரம், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு இதுதவிர சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் வரும் வாரத்தில் பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்து உள்ளனர்.