இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

நிதிநிலை முடிவுகள்
நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள், கொரோனா வைரஸ் நிலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இன்போசிஸ், விப்ரோ, எச்.டி.எப்.சி. வங்கி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், எல் அண்டு டி, மகிந்திரா அண்டு மகிந்திரா பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் 5பைசா கேப்பிட்டல் உள்பட மொத்தம் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43வது ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்

கொரோனா வைரஸ்
நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.50 நெருங்கி விட்டது. கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்த சென்ற வார பங்கு வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டாளர்களும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளை வாங்கியதை காட்டிலும் அதிகளவில் விற்பனை செய்தனர்.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
கொரோனா வைரஸ்

அன்னிய செலாவணி
கடந்த ஜூன் மாதத்தின் சில்லைரை விலை மற்றும் மொத்த விலை பணவீக்கம் முறையே வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் வெளிவருகிறது. கடந்த 3ம் தேதியோடு முடிவடைந்த கடந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட் மற்றும் வழங்கிய கடன் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் கடந்த 10ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் இந்திய அன்னிய செலாவணி கையிருப்பு விவரம் ஆகியவற்றை வரும் வெள்ளிக்கிழமையன்று மத்திய அரசு வெளியிட உள்ளது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்…. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு
பணவீக்கம்

அமெரிக்கா
அமெரிக்கா இந்த வாரம் அந்நாட்டின் பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி, சில்லைரை விற்பனை உள்ளிட்ட பல பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. அதேபோல் சீனாவும் தனது பேலன்ஸ் ஆப் டிரேடு, தொழில்துறை உற்பத்தி, சில்லரை விற்பனை குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடுகிறது. ஜப்பானில் இந்த வாரம் தொழில்துறை உற்பத்தி மற்றும் வட்டி விகிதம் குறித்த முடிவு குறித்த விவரங்கள் வெளியாகிறது. இதுதவிர சர்வதேச நிலவரங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்த வாரம் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.