2020 டிசம்பரில் களை கட்டிய வாகன விற்பனை… மாருதி, அசோக் லேலண்ட், ஹூண்டாய் நிறுவனங்கள் ஹேப்பி

2020 டிசம்பரில் களை கட்டிய வாகன விற்பனை… மாருதி, அசோக் லேலண்ட், ஹூண்டாய் நிறுவனங்கள் ஹேப்பி

2020 டிசம்பர் மாதத்தில் பெரும்பாலான முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வாகன விற்பனை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

இந்துஜா குழுமத்தின் துணை நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 12,762 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 11,168 வர்த்தக வாகனங்களை மட்டுமே அசோக் லேலண்ட் நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.

2020 டிசம்பரில் களை கட்டிய வாகன விற்பனை… மாருதி, அசோக் லேலண்ட், ஹூண்டாய் நிறுவனங்கள் ஹேப்பி
அசோக் லேலண்ட்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 1.60 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2019 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். 2020 டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் உள்நாட்டில் மொத்தம் 1.40 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2019 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 14.6 சதவீதம் அதிகமாகும்.

2020 டிசம்பரில் களை கட்டிய வாகன விற்பனை… மாருதி, அசோக் லேலண்ட், ஹூண்டாய் நிறுவனங்கள் ஹேப்பி
ஹூண்டாய் கார்கள்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 2020 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 66,750 கார்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தை காட்டிலும் 33.14 சதவீதம் கூடுதலாகும். 2019 டிசம்பர் மாதத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மொத்தம் 50,135 கார்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. 2020 டிசம்பரில் அந்நிறுவனம் உள்நாட்டில் மட்டும் 47,400 கார்களை விற்பனை செய்துள்ளது. மேலும் 19,350 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

2020 டிசம்பரில் களை கட்டிய வாகன விற்பனை… மாருதி, அசோக் லேலண்ட், ஹூண்டாய் நிறுவனங்கள் ஹேப்பி
மகிந்திரா வாகனங்கள்

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் கடந்த டிசம்பரில் மொத்தம் 35,187 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 2019 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 10.3 சதவீதம் குறைவாகும். 2020 டிசம்பரில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் உள்நாட்டில் 16,182 பயணிகள் வாகனங்களையும், 16,795 வர்த்தக வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது. மேலும், 2,210 வாகனங்களை ஏற்றுமதியும் செய்துள்ளது. 2019 டிசம்பரில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் மொத்தம் 39,230 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.