சென்செக்ஸ் 5 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 5 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சுமாராக இருந்தது. சென்செக்ஸ் 5 புள்ளிகள் உயர்ந்தது.

2020ம் ஆண்டின் இறுதி வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும் பின்னர் சிறிது சரிவு கண்டது. இறுதியில் சென்செக்ஸ் உயர்வுடனும், நிப்டி சிறிய இறக்கத்துடனும் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா, எச்.டி.எப்.சி. மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ், டெக்மகிந்திரா மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 5 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம்..
சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,765 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,244 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 162 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.188 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 5 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 5.11 புள்ளிகள் உயர்ந்து 47,751.33 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 0.20 புள்ளிகள் குறைந்து கண்டு 13,981.75 புள்ளிகளில் முடிவுற்றது.