வரும் வார பங்கு வர்த்தகத்தில் கொரோனா உள்ளிட்டவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

வரும் வார பங்கு வர்த்தகத்தில் கொரோனா உள்ளிட்டவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி, முத்தூட் பைனான்ஸ், ஆயில் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கேன் பின் ஹோம்ஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் சி.எஸ்.பி. வங்கி உள்பட மொத்தம் 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட உள்ளன. நம் நாட்டில் கொரேனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டி விட்டது. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொடர்பாக வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனால் பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவன பங்குகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வரும் வார பங்கு வர்த்தகத்தில் கொரோனா உள்ளிட்டவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

அமெரிக்காவில் மேலும் ஒரு ஊக்குவிப்பு நிதிதொகுப்பு வழங்குவது தொடர்பாக குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளில் இடையிலான பேச்சுவார்த்தை இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நிதி தொகுப்பு வழங்குவதில் எந்தவித பின்னடைவு ஏற்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோமி பவுல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா-சீனா இடையிலான உறவு பலகீனம் அடைந்து வருவது சர்வதேச அளவில் கவலை அளிப்பதாக உள்ளது.

வரும் வார பங்கு வர்த்தகத்தில் கொரோனா உள்ளிட்டவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு

இந்தவாரம் அமெரிக்கா, யூரோ பகுதி, ஜப்பான் உள்பட பல நாடுகளின் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளிவர உள்ளது. இதுதவிர, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆகையால் மேற்கண்ட காரணிகளை பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.