2019ல் மோடியின் வாரணாசி தொகுதியில் 350 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்….. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

 

2019ல் மோடியின் வாரணாசி தொகுதியில் 350 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்….. பிரியங்கா காந்தி கடும் தாக்கு

கடந்த ஆண்டில் மோடியின் வாரணாசி தொகுதியில் 365 நாட்களில் 350 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இப்பவும் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என மக்களிடம் அவர் தைரியமாக சொல்வாரா என பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.

பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் உயிருக்கு எந்தவித சேதமும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் பகுதியில் 4க்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு. அதை மீறி கும்பல் கூடினால், பொதுமக்களின் அமைதியை பாதிப்படைய செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

144 தடை உத்தரவு

பிரதமர் நரேந்திர கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வென்ற தொகுதி வாரணாசி. வாரணாசி தொகுதியில் கடந்த ஆண்டு 365 நாட்களில் 350 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளிவந்த போது அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதனையடுத்து அந்த மாதத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் அங்கு 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு வெவ்வேறு நிகழ்வு காரணமாக 144 தடை உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது. ஒட்டு மொத்தத்தில் கடந்த ஆண்டில் வாரணாசி தொகுதியில் 365 நாட்களில் 350 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்ததாக அம்மாவட்ட துணை ஆட்சியர் வினய் சிங் தெரிவித்தார்.

மோடி

இந்த தகவல் வெளியான அடுத்த சில மணி நேரத்தில், பிரதமர் மோடியை கடுமையாக கிண்டல் செய்து பிரியங்கா காந்தி டிவிட்டரில் பதிவு செய்தார். டிவிட்டரில் பிரியங்கா காந்தி, 2019ல் 365 நாட்களில் 350 நாட்கள் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இப்பவும் மக்களிடம் பயப்படுதவற்கு ஒன்றும் இல்லை என மக்களிடம் மோடி தைரியமாக சொல்வாரா என பதிவு செய்து இருந்தார்.