2019ம் ஆண்டின் துலாம் ராசி புத்தாண்டு பலன்கள்! 

 

2019ம் ஆண்டின் துலாம் ராசி புத்தாண்டு பலன்கள்! 

துலாம் ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்

துலாம் : 

கவர்ச்சிகாரகன் சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட துலாம் ராசி நேயர்களே . அனைத்து துறைகளிலும் ஞானம் உடையவர்கள் நீங்கள் .தன்னிச்சையாக தொழில் தொடங்குவதில் நாட்டம் உடையவர்கள் . எந்த நிலையிலும் அனைத்து தரப்பு மக்களையும் சரி சமமாக நடத்துவீர்கள்.

thulam rasi palangal

2019 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு மிக நல்ல பலன்களை கொடுக்க கூடிய ஆண்டாக அமையும் . 2012 மே மாதம் முதல் 2018 வரை நீங்கள் பட்ட வேதனைகள் சொல்லில் அடங்காது . மிக கடுமையான பொருளாதார நெருக்கடிகளை நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். 

வருகின்ற ராகு மற்றும் கேது பெயர்ச்சிகள்  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மிகுந்த மேன்மையான பலன்களை கொடுக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே ஏற்பட்டு வந்த மன போராட்டங்கள் மாறி இணக்கமான சூழல் உருவாகும்.

நீங்கள் எடுத்த காரியத்தில் எளிதில் வெற்றி கிடைக்கும். நல்ல பெயரும் புகழும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குழப்பங்கள் தீரும். பணப்புழக்கம் அதிகமாகும் .நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் . 

thulam

பொருளாதாரத்தில் நீங்கள் தன்னிறைவு அடைவீர்கள். சுகஸ்தானத்தில் இருந்து வந்த கேது உங்களுக்கு கடும் இன்னல்களை கொடுத்து வந்தார் வருகின்ற ராகு மற்றும் கேது பெயர்ச்சிக்கு பிறகு இந்த நிலை கண்டிப்பாக மாறி மிக நல்ல பலன்களை தர இருக்கிறார் .

வீடு மனை யோகம் உங்களுக்கு கண்டிப்பாக ஏற்படும் விவசாய தொழிலில் மேன்மை அடைவீர்கள். உத்தியோக உயர்வு உங்களுக்கு ஏற்படும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைக்கும். கண்டிப்பாக காதல் திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

துலா லக்ன பலன்கள் : வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் புரிய கூடிய காலகட்டம் இதுவாகும்.

சித்திரை நட்சத்திரம் : புதிய வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு உண்டாகும்.

thulam

சுவாதி நட்சத்திரம் : பணவரவு அதிகரிக்கும் புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும்.

விசாக நட்சத்திரம் : வேலையில் ஏற்பட்டு வந்த தேக்க நிலை மாறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.

அதிர்ஷ்ட எண்கள் : 2,3,6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

பரிகாரம் : கோயில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகள் வாங்கி கொடுப்பதும் ஏழை மாணவர்களுக்கு தேவையான செருப்பு வாங்கி கொடுப்பதும் குளிர் பிரதேசங்களில் குளிரால் வாடுபவர்களுக்கு கம்பளி வாங்கி கொடுப்பதும் மிக சிறந்த பரிகாரமாக இருக்கும்.