2018-ஆம் ஆண்டில் டிவிட்டரில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட கேம்களின் பட்டியல் வெளியானது…முதலிடத்தில் பப்ஜி இல்லை!

 

2018-ஆம் ஆண்டில் டிவிட்டரில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட கேம்களின் பட்டியல் வெளியானது…முதலிடத்தில் பப்ஜி இல்லை!

2018-ஆம் ஆண்டில் டிவிட்டரில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட கேம்ளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

மும்பை: 2018-ஆம் ஆண்டில் டிவிட்டரில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட கேம்ளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளமான ட்விட்டரில் கேம்களை பற்றியும் அதிகளவில் பதிவுகள் பதிவிடப்படுகின்றன. அந்த வகையில் 2018-ஆம் ஆண்டில் டிவிட்டரில் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட கேம்ளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டில் கேம் தொடர்பாக மட்டும் சுமார் 1 பில்லியன் ட்வீட்டுக்கள் பதிவிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால், மூக்கின் மேல் விரலை வைக்கும் விதமாக பப்ஜியோ அல்லது ஃபோர்ட்நைட் கேம் இரண்டுமே முதலிடத்தை பிடிக்கவில்லை. அதற்கு மாறாக ஜப்பானை சேர்ந்த சோனி நிறுவனத்தின் கிளை நிறுவனமான அனிப்ளெக்ஸ் மற்றும் டிலைட் வொர்க்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த ஃபேட் கிராண்ட் ஆர்டர் கேம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஜப்பான் தவிர அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே இந்த கேமை டவுன்லோடு செய்து விளையாட முடியும்.

2018-இல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட கேம்கள்

   1. ஃபேட் கிராண்ட் ஆர்டர்

   2. ஃபோர்ட்நைட்

   3. மான்ஸ்டர் ஸ்ட்ரைக்

   4. ஸ்பிளாடூன் 2

   5. பப்ஜி

   6. கிரான்புளூ ஃபேண்டஸி

   7. என்செம்பிள் ஸ்டார்ஸ்

   8. சூப்பர் ஸ்மாஷ் பிரதர்ஸ்

   9.ஓவர்வாட்ச்                                                                                                                                  10. ஃபைனல் ஃபேண்டஸி

இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஃபேட் கிராண்ட் ஆர்டர் கேம் சுமார் இரண்டு பில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்தும் சாதனை படைத்துள்ளது. அதில் 97 சதவிகித வருமானம் ஜப்பானில் இருந்து மட்டுமே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.