புதிய தலைமைச்செயலாளர் இவர்தானா? ஜெ.,வின் நம்பிக்கைக்கு உரியவரா இருந்தவர்!

 

புதிய தலைமைச்செயலாளர் இவர்தானா? ஜெ.,வின் நம்பிக்கைக்கு உரியவரா இருந்தவர்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்துக்காரர்தான் தற்போது தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இருக்கும் கே.சண்முகம். இரண்டு முறை அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில்தான் அவர் தலைமைச்செயலாளராக இருந்து வருகிறார்.

புதிய தலைமைச்செயலாளர் இவர்தானா? ஜெ.,வின் நம்பிக்கைக்கு உரியவரா இருந்தவர்!

இம்மாதம் 31ம் தேதியுடன் அவருடையை பதவிக்காலம் முடிவடைகிறது. மூன்றாவது முறையும் அவரை பணி நீட்டிப்பு வழங்க இருக்கும் நிலையிலும் பணி கேட்பதையும், பணியில் தொடர அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் புதிய தலைமைச்செயலாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறாராம் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரான ஹன்ஸ்ராஜ் வர்மா, 1986ல் தமிழ்நாடு அரசுப்பணியில் சேர்ந்தார். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் தமிழ்நாடு அரசு பணியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறார்.

மாவட்ட ஆட்சியர், மின்சாரத்துறை, பத்திரப்பதிவுத்துறை, டாஸ்மாக், தொழிலாளர் நலத்துறை, வனதுறை, கனிம வளம் உள்ளிட்ட துறைகளில் பணீயாற்றிக்கொண்டிருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா, 2016ம் ஆண்டு முதல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளராக இருந்து வருகிறார். தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் செயலாளராகவும் பொறுப்பேற்றிருக்கும் ஹன்ஸ்ராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்.

புதிய தலைமைச்செயலாளர் இவர்தானா? ஜெ.,வின் நம்பிக்கைக்கு உரியவரா இருந்தவர்!

இலவச மடிக்கணினி திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியவர். கடந்த ஆண்டின் அக்டோபர் மாதம் இணையவழி தொழில்நுட்ப மாநாட்டில் இவருடயை பங்குதான் பெரிதாக இருந்துள்ளது.

ஹன்ஸ்ராஜ் வர்மா, தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, டிஜிட்டல் ஆளுமையில் சிறைந்த மாநில விருதை பெற்றிருக்கிறது தமிழகம். இதனால் எடப்பாடியாரின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார்.

மீனாட்சி ராஜகோபால், ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோரும் புதிய தலைமைச்செயலாளர் பட்டியலில் இருந்தாலும் ஹன்ஸ்ராஜ் வர்மா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பிருக்கிறதே என்றே சொல்கிறது கோட்டை வட்டாரம்.