’’ஏமாற்றப் பார்த்தால் நாசமாய் போவீர்கள்..’’ பங்கீட்டுப் பிரச்சனையில் ஆவேசமாகும் ராமதாஸ்

 

’’ஏமாற்றப் பார்த்தால் நாசமாய் போவீர்கள்..’’ பங்கீட்டுப் பிரச்சனையில்  ஆவேசமாகும் ராமதாஸ்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை தீவிரமாக கையில் எடுத்திருக்கிறோம் என்று பாமக தரப்பில் சொல்லப்பட்டு வந்தாலும், முதல்வர் எடப்படி பழனிச்சாமியை அன்புமணிராமதாசும், ஜி.கே.மணியும் சந்தித்து பேசியது சீட் பேரத்திற்காகத்தான் என்ற பேச்சு எழுந்தது.

’’ஏமாற்றப் பார்த்தால் நாசமாய் போவீர்கள்..’’ பங்கீட்டுப் பிரச்சனையில்  ஆவேசமாகும் ராமதாஸ்

திமுகவுடனும் பாமக பேச்சு நடத்தி வருகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், திமுகவை பாமக ஒதுக்கிவிட்டதோ என்னவோ தெரியவில்லை. திடீரென்று நேற்று, ‘’தேர்தல் வருவதற்கு முன்பாக சீட் ஒதுக்கீடு போன்ற பல பேரங்களுக்காக ஒரு பெரும் சமுதாயத்தை நீங்கள் அடகு வைக்கிறீர்கள். உங்களை வளப்படுத்திக்கொள்கிறீர்கள். சமுதாயத்தை நட்டாற்றில் விட்டுவிடுகிறீர்கள். அதனால்தான் நம்மவர்கள் பலர் உங்களை விட்டு விலக தொடங்கியுள்ளனர் என்று சொல்லிவிட்டு, 20 சதவிகித ஒதுக்கீட்டில் எத்தனை சதவிகித உள் ஒதுக்கீடு கேட்கிறீர்கள் என்பதனை தெளிவுபடுத்தாதது ஏன்?’’ என்றும்,

’’தேர்தலில் தோற்ற சின்ன அய்யா அன்புமணிக்கு எம்.பி. சீட் தந்ததை தவிர அதிமுக ஆட்சியில் வன்னிய மக்களுக்காக என்ன செய்தார்கள்? இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 வன்னிய உயிர்களை பறித்த ஆட்சிதானே அதிமுக ஆட்சி. அந்த கட்சிக்கு வரிந்து கட்டி ஆதரவு வழங்குவது ஏன்? பின்னணியில் பல ‘கோடி’ விவகாரங்கள் இருப்பதாக சொல்கிறார்களே.. உண்மையா?

’’ஏமாற்றப் பார்த்தால் நாசமாய் போவீர்கள்..’’ பங்கீட்டுப் பிரச்சனையில்  ஆவேசமாகும் ராமதாஸ்

வன்னியர்களுக்கு இருபது சதவிகித இட ஒதுக்கிடு வேண்டும் என்று சொன்ன நீங்கள், இப்போது உள் ஒதுக்கீடு போதும் என்று பின் வாங்கியது ஏன்? ‘பாதாளம் மட்டும் பாயும்’ சக்தி வாய்ந்த பல பேரங்கள்தான் காரணம் என்று பலராலும் பேசப்படுவது உண்மையா?’’ என்றும் பொங்கியது திமுகவின் முரசொலி நாளிதழ்.

’’ஏமாற்றப் பார்த்தால் நாசமாய் போவீர்கள்..’’ பங்கீட்டுப் பிரச்சனையில்  ஆவேசமாகும் ராமதாஸ்

இந்த நிலையில்தான் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் நேற்று பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து 2 மணி பேசினர்.

இந்த சந்திப்பும், இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இல்லை. சீட் பேரம்தான் என்று பலரும் சொல்லிவந்தனர். கடைசியில் பேச்சுவார்த்தையில் என்ன நடந்ததோ தெரியவில்லை.

’’ஏமாற்றப் பார்த்தால் நாசமாய் போவீர்கள்..’’ பங்கீட்டுப் பிரச்சனையில்  ஆவேசமாகும் ராமதாஸ்

’’தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்’’ என்று டுவிட்டரில் பதிவிட்ட ராமதாஸ், ‘’அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்று அழுத்தமாக பதிவிட்டிருந்தார்.

இது போதாது என்று, தனது முகநூல் பக்கத்திலும்,

’’இது ஆட்சியாளர்களுக்கு சமர்ப்பணம்;
பெரியார் சொல்வதையாவது கேளுங்கள்!’’ என்று தலைப்பிட்டு,

“எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு – அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்கமுடியும்? தன்னுடைய பங்கைத் தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்.” என்று தந்தை பெரியார், 08.11.1931ல் குடிஅரசு தலையங்கம் பகுதியில் எழுதி இருப்பதை எடுத்து பதிவிட்டுள்ளார்.

’’ஏமாற்றப் பார்த்தால் நாசமாய் போவீர்கள்..’’ பங்கீட்டுப் பிரச்சனையில்  ஆவேசமாகும் ராமதாஸ்

இட ஒதுக்கீடு என்று ராமதாஸ் சொன்னாலும், தொகுதி பங்கீட்டு பிரச்சனையில்தான் இப்படி அவர் எச்சரிப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. இட ஒதுக்கீடோ, தொகுதி பங்கீடோ.. ஏமாற்றப் பார்த்தால் நாசமாய் போவீர்கள் என்று அதிமுகவை எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.