20,000 ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைந்தனர் – ரஜினி ஆதரவு திமுகவுக்கா?

 

20,000 ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைந்தனர் – ரஜினி ஆதரவு திமுகவுக்கா?

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி: ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி ரசிகர்கள் 20 ஆயிரம் பேர், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதன்பிறகு பேசிய ஸ்டாலின், குட்கா வழக்கு, கோடநாடு வழக்கு உள்ளிட்ட வழக்குகளை வைத்து அதிமுகவை பாஜக மிரட்டி வருகிறது. என்ன செய்தாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என தெரிவித்தார்.

20,000 ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைந்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி முழங்கியதால் அதிமுக தோல்வி கண்ட வரலாறும் உண்டு. மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மீது எப்போதும் மரியாதை கொண்டவர் ரஜினிகாந்த். ரஜினியின் பட விழாக்களில் கலந்துகொள்ளும் அளவு கருணாநிதியும் நட்பு பாராட்டி வந்தார். கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாத வேளையில் அரசியலுக்கு வந்தார் ரஜினி, சிஸ்டம் சரியில்லாததால் அரசியலுக்கு வருகிறேன் என்றார். ஆனால் இன்று வரை அதிகாரப்பூர்வமாக கட்சி எதுவும் தொடங்கவில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பாத ரஜினி, தண்ணீர் பிரச்சனையை தீர்க்க திட்டம் வைத்துள்ள கட்சிக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் 20,000 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.

கமல்ஹாசன் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும் வேளையில், மக்களவை தேர்தலில் ரஜினியின் ஆதரவு திமுக பக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.