2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ஒற்றை பொய்யால் நடந்த கொலை…ஆக்சிஸ் பேங்க் மேனேஜர் கைது!

 

2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ஒற்றை பொய்யால் நடந்த கொலை…ஆக்சிஸ் பேங்க் மேனேஜர் கைது!

இதையடுத்து அவரது  உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர்.

கோவையில் ஈச்சனாரி அருகே கடந்த 3ஆம் தேதி ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் சண்முகம் என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது  உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி  வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் அவர் சதீஷ் என்பவருக்கு அடிக்கடி போனில் பேசியுள்ளது தெரியவந்தது.  இதை தொடர்ந்து போலீசார் சதீஷை பிடித்து விசாரணை நடத்தினர். 

ttn

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், சுந்தராபுரம் ஆக்சிஸ் வங்கிக் கிளையில் மேலாளராக இருந்த சதீஷுக்கும், சண்முகத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சதீஷ் டிசம்பர் மாதத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற வதந்தியைப் பயன்படுத்திக்கொண்டு, 2000 ரூபாய் நோட்டுகளை  15 முதல் 20 சதவிகித கமிஷனுக்கு மாற்றி தருவதாக கூறியுள்ளார். அதன்படி  அதே வாங்கி கிளையில் கணக்கு வைத்திருந்த  மதுசூதனன் என்பவரிடமிருந்து 4 லட்சம் ரூபாயை 500ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்துள்ளார். ஆனால்  இதற்கான பணத்தை சண்முகம் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், மதுசூதனன் இருவரும் மகேஸ்வரன் என்பவருடன் துணையுடன் சண்முகத்தை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ttn

இதை தொடர்ந்து கொலை குற்றாளிகள் மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.