‘ஆசையை தூண்டி ஆளையே கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்’ கடன்காரராகி வாலிபர் தற்கொலை..

 

‘ஆசையை தூண்டி ஆளையே கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்’  கடன்காரராகி  வாலிபர் தற்கொலை..

இந்த ஊரடங்கு நேரத்தில் பெரும்பாலானோர் வீட்டிலிருப்பதால் கையிலிருக்கும் மொபைல் போனில் ஒரு விளம்பரம் அடிக்கடி வருவதை பார்த்திருப்பீர்கள் ,அதுதான் ஆன்லைன் சூதாட்டம் .அந்த சூதாட்ட விளம்பரத்துக்கு பல நடிகைகள் கூட விளம்பர மாடலாக வருகிறார்கள் .இன்று இந்த ஆன்லைன் சூதாட்டம் பலரின் வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டிருக்கிறது ,சிலரின் உயிரை கூட பறிக்கிறது .
சென்னை அமிஞ்சிக்கரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் நிதிஷ் .இவர் கல்லூரியில் படித்துக்கொண்டே ஒரு ஸ்டுடியோவில் பகுதி நேர வேலை பார்க்கிறார் .அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மொபைல் போனில் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவார் .நாளடைவில் அதற்கு அவர் அடிமையாகிவிட்டார் .இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் ஆரம்பத்தில் நம்மை வெற்றி பெற விட்டு சிறு தொகையினை ஜெயிக்க விட்டு ,நம்மை அதற்கு அடிமையாக்கிய பிறகு ,நம்மிடமிருந்து பெரிய தொகையினை ஆட்டையை போட்டு விடுவார்கள் .

‘ஆசையை தூண்டி ஆளையே கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்’  கடன்காரராகி  வாலிபர் தற்கொலை..
இப்படித்தான் நிதிஷும் ஆரம்பத்தில் எப்போதாவது விளையாடி பிறகு எப்போதும் விளையாடுமளவுக்கு அதற்கு அடிமையாகிவிட்டார் .முதலில் கையிலிருந்த காசை போட்டு விளையாடி ,பிறகு கடன் வாங்கி விளையாடி ,பிறகு தான் வேலை செய்யும் ஸ்டுடியோவின் பணத்தை வைத்து விளையாடி 20000ரூபாய் தோற்றதும் கையில் பணமில்லாததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஸ்டுடியோவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .அவர் எழுதியுள்ள தற்கொலை குறிப்பில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாட தான் நிறைய கடன் வாங்கியதால் திரும்பி கட்ட முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார் .
போலீசார் அவரின் பிரேதத்தினை கைப்பற்றி விசாரணை செய்து வருகிறார்கள் .சென்னை ஹை கோர்ட் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆன்லைன் சூதாட்டத்தினை ஒழுங்கு படுத்தவேண்டுமென அரசிடம் கூறியபிறகு இப்படி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பது கவலையளிக்கிறது .

‘ஆசையை தூண்டி ஆளையே கொல்லும் ஆன்லைன் சூதாட்டம்’  கடன்காரராகி  வாலிபர் தற்கொலை..