20 மாவட்டங்களில்… அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

 

20 மாவட்டங்களில்… அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் வருகிற 19ம் தேதி முதல் அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

20 மாவட்டங்களில்… அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

அதே போல, 20ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியிலும் கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 20 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.