20 மணி நேரம் பேட்டரி பேக்கப் – சியோமி எம்.ஐ அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்

 

20 மணி நேரம் பேட்டரி பேக்கப் – சியோமி எம்.ஐ அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ அவுட்டோர் ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 20 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் 5வாட் அவுட்புட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ப்ளூடூத் 5, ஆக்ஸ் போர்ட் வசதி, 2000 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகிய அம்சங்கள் இந்த ஸ்பீக்கர் மாடலில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.1,399 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருப்பு நிறத்தில் இந்த ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அழைப்புகளை ஏற்க மற்றும் நிராகரிக்க ஒற்றை பட்டன் இந்த ஸ்பீக்கரில் உள்ளது. அதேபோல ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் இயங்குதளங்களுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் எளிதாக எடுத்து செல்லக் கூடிய வகையில் சிறிய அளவில் கையடக்க வடிவமைப்பு கொண்டிருக்கிறது. எம்.ஐ இணயதளத்தில் இந்த ஸ்பீக்கரை வாங்க முடியும்.