20 நிமிடத்திற்கு 1 கோடி? பிரபல நடிகை குறித்த சுவாரஸ்ய தகவல்!

 

20 நிமிடத்திற்கு 1 கோடி? பிரபல நடிகை குறித்த சுவாரஸ்ய தகவல்!

என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவி பாத்திரத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ரூ.1 கோடி சம்பளம் வாங்கி  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஸ்ரீதேவி பாத்திரத்தில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ரூ.1 கோடி சம்பளம் வாங்கி  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

மறைந்த தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தயாரிக்கப்பட்டு வருகிறது. தேஜா இயக்கும் இப்படத்தில், என்.டி.ஆரின் கதாப்பாத்திரத்தில் அவரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்க, அவரின் மனைவியாக வித்யா பாலன் நடிக்கிறார்.

இப்படத்தில் ஸ்ரீதேவி கதாப்பாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் படத்தில் காட்டப்படுகிறது. இதற்கான ரகுல் ப்ரீத் சிங்-க்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இப்படம் குறித்து கருத்து கூறியுள்ள அவர், ‘இதுவரை நான் நடித்ததிலேயே மிகப்பெரிய சவாலான கதாபாத்திரம் இது. ஸ்ரீதேவியை போன்ற ஒரு ஆளுமையின் பாத்திரத்தில் நடிப்பதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது’ என்று கூறியுள்ளார்.