20 ஓவர் தொடர் நாளை தொடங்குகிறது: இறுதிக்கட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து சுற்றுப்பயணம்

 

20 ஓவர் தொடர் நாளை தொடங்குகிறது: இறுதிக்கட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து சுற்றுப்பயணம்

இந்திய அணி மேற்கொண்டு வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமான இருபது ஓவர் தொடரின் முதல் ஆட்டம் நாளை வெலிங்டன் நகரில் நடக்கிறது

இந்திய அணி மேற்கொண்டு வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமான இருபது ஓவர் தொடரின் முதல் ஆட்டம் நாளை வெலிங்டன் நகரில் நடக்கிறது .இத்தொடர் மூன்று போட்டிகள் கொண்டதாகும் .

இதுவரை நியூசிலாந்து மண்ணில் ஒரே ஒரு இருபது ஓவர் தொடரில் விளையாடிய இந்தியா ,அத்தொடரின் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது .2009ஆம் ஆண்டு பயணத்தின் போது இது நிகழ்ந்தநு .2014ஆம் ஆண்டு பயண அட்டவணையில் 20 ஓவர் போட்டிகள் இடம்பெறவில்லை .

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இடம்பெறாத ,ஹர்திக் அணிக்கு திரும்பியிருப்பதால் ,XIல் இடம்பெற்றால் அவருக்கு வழி விடப்போகும் நபர் யார் என்பது கவணிக்க வேண்டிய விஷயம் .இவர்கள் தவிர ,நடந்து முடிந்த 
ஒரு நாள் தொடரில் விளையாடாத குருணால் பண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 20ஓவர் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . 

ஷுப்மன் கில் பங்கேற்ற முதல் இரு சர்வதேச போட்டிகளிலும் அவரது பங்களிப்பு முறையே 9 மற்றும் 7 ரன்கள் என்றாலும் அந்த நாட்களின் சூழலுக்கு அனுபவமிக்க வீரர்கள் கூட தடுமாறியது குறிப்பிடத்தக்கது .கோலி மற்றும் ராகுல் இல்லாத சூழலில் தனக்கு கிடைத்த சாதகமான நிலையை கில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .

நியூசிலாந்து அணியில் கப்தில் இடம்பெறவில்லை என்பதால் அவரது இடத்தை ஈடு செய்யும் நோக்கில் அணித்தலைவர் வில்லியம்ஸன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது .இதுவரையில் தான் பங்கேற்ற 54 இருபது ஓவர் சர்வதேச போட்டிகளில் 27ல் அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி இருக்கின்றார் .

கப்திலுக்கு மாற்று வீரராக வந்த ஜேம்ஸ் நீஷம் ,கடைசி ஒருநாள் போட்டி போலவே இத்தொடரிலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்பது அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது .

இந்திய அணி விளையாடிய கடைசி 10 இருபது ஓவர் தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையில் விளையாடிய 12 இருபது ஓவர் போட்டிகளில் ஓன்றில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது .

மொத்தத்தில் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட இந்தியாவும் ,ஒருநாள் தொடரில் கண்ட எதிர்பாரா வீழ்ச்சியை சரி செய்ய நியூசிலாந்தும் முயற்சிக்கும் 

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. அணியில் பங்குபெறும் வீரர்கள் பெயர் பின்வருமாறு

இந்தியா : - ரோகித் சர்மா (கேப்டன்), தவான், ஷுப்மான் கில், டோனி, கேதர் ஜாதவ், ரிஷப் பந்த், விஜய் சங்கர், ஹர்த்திக் பண்ட்யா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, குருணால் பாண்ட்யா.

நியூசிலாந்து:- வில்லியம்சன் (கேப்டன்), கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீசம், டிம் செய்பெர்ட், சான்ட்னெர், சவுத்தி, கிராண்ட்ஹோம், சோதி, டிக்னெர், மிச்செல், ஸ்காட், பெர்குசன், பிரேஸ்வெல்.