“வரியா சார் ,அப்படி ஓரமா ஒதுங்கலாம் “-போலீஸ் உதவியோடு ‘புது ரூட்’ பலான தொழில தெரிஞ்சிக்கிட்டு உஷாரா இருங்க .

 

“வரியா சார் ,அப்படி ஓரமா ஒதுங்கலாம் “-போலீஸ் உதவியோடு ‘புது ரூட்’ பலான தொழில தெரிஞ்சிக்கிட்டு உஷாரா இருங்க .

விபச்சார பெண்களை வைத்து பலான தொழில் நடத்தி பணம் பறித்ததாக , இரண்டு கான்ஸ்டபிள்கள் மீது புகார் வந்ததால் அவர்கள் மீது விசாரணை நடக்கிறது.

“வரியா சார் ,அப்படி ஓரமா ஒதுங்கலாம் “-போலீஸ் உதவியோடு ‘புது ரூட்’ பலான தொழில தெரிஞ்சிக்கிட்டு உஷாரா இருங்க .


உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பிலிபிட்டில் உள்ள செராமாவ் பகுதியில் இருக்கும் கார்வட்கேரா காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள்களாக விபின் மிஸ்ரா (23) மற்றும் சச்சின் மிஸ்ரா (22) ஆகியோர் பணியாற்றினார்கள் .அவர்களை அவர்களின் உயரதிகாரி அங்குள்ள போலீஸ் செக் போஸ்ட்டிற்கு காவலுக்கு அனுப்பினார் .அப்போது அந்த இடத்தில அவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்கள் .அதன் படி அவர்கள் அந்த பகுதியிலிருக்கும் சில பலான பெண்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு அந்த பெண்கள் மூலம் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார்கள் .
அவர்களின் திட்டப்படி, அந்த பெண்கள் அந்த போலீஸ் பூத்துக்கு அருகே நின்று கொண்டு அந்த வழியாக போகும் வாலிபர்களை விபச்சாரத்துக்கு அழைப்பார்கள் .அப்போது அவர்களிடம் மயங்கி அவர்களை தேடி வரும் வாலிபர்களை ,அங்கு ஒளிந்து கொண்டிருக்கும் இந்த இரு கான்ஸ்டபிளும் வந்த வாலிபர்களை மிரட்டி பணத்தை பறிப்பார்கள் .இதில் அந்த பாலியல் பெண்களுக்கும் பங்கு கொடுப்பார்கள் .
இந்த நூதன பாலியல் மோசடி பற்றி ஊடகத்தில் இரு பெண்களின் ஆடியோ கிளிப் ஒன்று வைரலானது .அதை கேட்ட சிலர் இந்த மோசடி பற்றி காவல் துறை உயரதிகாரிகளிடம் புகார் கூறினர் .பிறகு அந்த ஆடியோவை வைத்து அந்த அதிகாரி ரகசியமாக அந்த கான்ஸ்டபில்களை கண்காணித்தார் .
அப்போது அவர்களின் இந்த பாலியல் மோசடி பற்றி அவர் அறிந்து கொண்டார் .பின்னர் அந்த இரு போலீஸ்காரரர்களையும் அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார் .அதன் பிறகு அந்த போலீஸ் அதிகாரி கூறுகையில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் .

“வரியா சார் ,அப்படி ஓரமா ஒதுங்கலாம் “-போலீஸ் உதவியோடு ‘புது ரூட்’ பலான தொழில தெரிஞ்சிக்கிட்டு உஷாரா இருங்க .