தேனி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதைப்பொருட்கள் பறிமுதல்!

 

தேனி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதைப்பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு புறம் அதிகரித்து வரும் நிலையில் மறுபக்கம் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குட்காவுக்கான மதிப்பும் வரவேற்பும் அதிகமாக இருப்பதால், பெரும்பாலும் குட்காவே கடத்தப்படுகின்றன. சமீபத்தில் கடலூர் மாவட்டம் கே.என் பேட்டையில் 8 டன் குட்காவும்வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் 50 மூட்டை குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர், சென்னை திருநின்றவூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 329 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தேனி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதைப்பொருட்கள் பறிமுதல்!

இந்த நிலையில், தேனி அருகே வெங்கலா கோயில் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதை பொருட்கள் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, திடீர் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கு குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவை அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் கணேசன், மணிகண்டன், ராஜாகுரு ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.