அனல்மின் நிலையத்தில் திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து.. 2 ஊழியர்கள் பரிதாப பலி!

 

அனல்மின் நிலையத்தில் திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து.. 2 ஊழியர்கள் பரிதாப பலி!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் என்.எல்.சி அனல் மின் நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், திடீரென 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், அனல்மின் நிலையத்தினுள் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனல்மின் நிலையத்தில் திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து.. 2 ஊழியர்கள் பரிதாப பலி!

திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் 17 ஊழியர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் 2 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாய்லர் ஏன் வெடித்தது என்பது குறித்த எந்த விவரமும் இன்னும் வெளியாகவில்லை. மேலும், ஊழியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதமும் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.