தமிழகத்தில் மேலும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா; பெற்றோர்கள் அச்சம்!

 

தமிழகத்தில் மேலும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா; பெற்றோர்கள் அச்சம்!

தமிழகத்தில் மொத்தமாக 5 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. அச்சமயம் கொரோனா பரவல் அதிகரித்து காரணத்தினால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டன. சுமார் 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

தமிழகத்தில் மேலும் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா; பெற்றோர்கள் அச்சம்!

கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் கடுமையாக பின்பற்றப்படுகிறது. எனினும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாவது பெற்றோர்களை அச்சம் அடைய செய்துள்ளது.

நேற்று கடலூரைச் சேர்ந்த ஒரு ஆசிரியைக்கும் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கும் தொற்று உறுதியாகியிருந்தது. இதனால் மாணவ, மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் இரண்டு ஆசிரியைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. திருப்பூரில் ஒரு ஆசிரியைக்கும் கடலூரில் ஒரு ஆசிரியைக்கும் பாதிப்பு உறுதியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.