2 கோடியே 25 ஆயிரம்: கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள்

 

 2 கோடியே 25 ஆயிரம்: கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள்

உலகின் மாபெரும் பேரிடராக கடந்த ஒன்பது மாதங்களாகத் தொல்லை தருவது கொரோனா வைரஸ் தாக்குதல்தான். சென்ற ஆண்டு சீனாவில் தொடங்கிய இந்தத் துயரம் இன்னும் முடிந்தபாடில்லை.

உலகம் முழுவதும் இதன் பாதிப்புகள் நிறைந்திருக்கின்றன. கடந்த 100 நாட்களாக புதிய கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என நியூசிலாந்து நாடு அறிவிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் ஒரு லட்சம் பேரை கொரோனாவால் இழந்திருக்கிறோம் என பிரேசில் கூறும்போது கவலைப் படுகிறோம்.

 2 கோடியே 25 ஆயிரம்: கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள்

இன்றைய (ஆகஸ்ட் 10) காலை நிலவரப்படி, உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு கோடியைக் கடந்துவிட்டது. மற்ற விவரங்களையும் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே  25 ஆயிரத்து 245 பேர்.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 28 லட்சத்து 99 ஆயிரத்து 801 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 7 லட்சத்து 33 ஆயிரத்து 997 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.

 2 கோடியே 25 ஆயிரம்: கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள்

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 63 லட்சத்து 91 ஆயிரத்து 447 பேர். இவர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 51 லட்சத்து 99 ஆயிரத்து 444 பேரும், பிரேசில் நாட்டில் 30 லட்சத்து 35 ஆயிரத்து 582 பேரும் இந்தியாவில் 22 லட்சத்து 15 ஆயிரத்து 074 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 2 கோடியே 25 ஆயிரம்: கொரோனாவால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள்

இதில் அமெரிக்காவில் பார்த்தால் மொத்தப் பாதிப்பு 51,99,444 பேர். அவர்களில் குணம் அடைந்திருப்பவர்கள் 26,64,701 பேர். கிட்டத்தட்ட 50 சதவிகிதத்திற்கு சற்று அதிகமான விகிதமே குணம் அடைந்தவர் எண்ணிக்கை இருக்கிறது.

அமெரிக்காவில் தற்போது சிகிச்சை எடுப்பவர்கள் 23,69,126 பேர். இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பாதாயிரத்தைக் கடந்துவிட்டது.