வேலூரில் ஆக்சிஜன் இல்லாததால் கொரோனா நோயாளிகள் 2 பேர் உயிரிழப்பு?

 

வேலூரில் ஆக்சிஜன் இல்லாததால் கொரோனா நோயாளிகள் 2 பேர் உயிரிழப்பு?

வேலூரில் ஆக்சிஜன் இல்லாததால் கொரோனா நோயாளிகள் 2 பேர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கபப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு இன்று சுமார் அரை மணி நேரமாக ஆக்சிஜன் வராததால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் மூஞ்சூர்பட்டை சேர்ந்த கலைச்செல்வி(42), திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் ஆகியோர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

வேலூரில் ஆக்சிஜன் இல்லாததால் கொரோனா நோயாளிகள் 2 பேர் உயிரிழப்பு?

இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மருத்துவமனை முதல்வர், “அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையோ பழுதோ இல்லை. கொரோனா வார்டுக்கு 2 ஆக்சிஜன் இணைப்புகள் கொடுத்துள்ளோம். 2 வார்டுக்குமே உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு இருவரின் உடலும் ஒத்துழைக்கவில்லை. கலைச்செல்வி ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது. இருந்த போதும் அவர் நுரையீரலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாவே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த கலைச்செல்வி அரசு மருத்துவமனையிலேயே தூய்மை பணியாளராக பணி செய்பவர்” என விளக்கமளித்துள்ளார்.