தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய தம்பி: காப்பாற்ற சென்ற அக்காவும் பரிதாப பலி!

தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய தம்பி: காப்பாற்ற சென்ற அக்காவும் பரிதாப பலி!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், பிருந்தா(10) என்ற மகளும், கிரிதரன் (8) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 2 பேரும் செந்துறையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு என்பதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் இருந்த பிருந்தா மற்றும் கிரிதரன் இருவரும் நேற்று வீட்டின் அருகில் உள்ள குளக்கரையில் குளிக்கச் சென்றனர். அப்போது அங்கு ஏற்கனவே வெட்டப்பட்டிருந்த ஆழமான பள்ளத்தில் கிரிதரன் வழுக்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளான். இதை கண்ட அக்கா பிருந்தா தம்பியை காப்பாற்ற முனைந்தார். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய தம்பி: காப்பாற்ற சென்ற அக்காவும் பரிதாப பலி!

இதை அந்த வழியாக சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பார்த்துவிட்டு பேருந்தை நிறுத்தி கூச்சலிட அங்கிருந்தவர்கள் ஓடி வந்த இருவரையும் மீட்டு பொன் பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கே மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய தம்பி: காப்பாற்ற சென்ற அக்காவும் பரிதாப பலி!

செந்துறை அரசு மருத்துவமனையில் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.