2.75 லட்சம் கிராமங்களில் ராமர் சிலை நிறுவ விஷ்வ இந்து பரிஷத் திட்டம்….

 

2.75 லட்சம் கிராமங்களில் ராமர் சிலை நிறுவ விஷ்வ இந்து பரிஷத் திட்டம்….

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான ஆர்வத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில், 2.75 லட்சம் கிராமங்களில் ராமர் சிலை நிறுவ விஷ்வ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது.

1990களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான ராம் மந்திர் கோயில் இயக்கம் மிகவும் தீவிரமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 2.75 லட்சம் கிராமத்தினர் செங்கல்களை கொடுத்தனர். தற்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அதிகாரப்பூர்வமான நடவடிக்கையில் தொடங்கி விட்டது.

ராமர் சிலை (மாதிரி)

இந்த சூழ்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான மக்களின் ஆர்வத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் நோக்கில், 1990களில் ராமர் கோயில் கட்டுவதற்காக செங்கல்களை வழங்கிய 2.75 லட்சம் கிராமங்களில் ராமர் சிலை நிறுவ விஷ்வ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:

வி.எச்.பி. தொண்டர்கள்

ராமர் கோயில் கட்டுவதற்காக செங்கல்களை கொடுத்த 2.75 லட்சம் கிராமங்களுக்கு சென்று, ராமர் கோயில் நிகழ்வில் பங்களிப்பில் அவர்கள் பங்கேற்பதைக் குறிக்கும் நோக்கில் ஒவ்வொரு வீடுகளிலும் ராமர் சிலை நிறுவுமாறு கேட்டுக் கொள்ளுங்கள் என தொண்டர்களுக்கு தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிகள் வரும் மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடையும். ராமர் கோயில் இயக்க காலம் இந்த முறை ராமோத்ஸவமாக பெரிய அளவில் கொண்டாடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.