கொரோனா விதிமீறல்; சென்னையில் ரூ.2.52 கோடி அபராதம் வசூல்!

 

கொரோனா விதிமீறல்; சென்னையில் ரூ.2.52 கோடி அபராதம் வசூல்!

சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த பகுதி சென்னை தான் என்பது அனைவரும் அறிந்தவையே. இந்த கொரோனா வைரஸில் இருந்து சென்னையை மீட்டெடுக்க, மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் ஏராளம். வீடுதோறும் பரிசோதனை, நடமாடும் மருத்துவ முகாம் என பல்வேறு நடவடிக்கைகளின் எதிரொலியாக தற்போது சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

கொரோனா விதிமீறல்; சென்னையில் ரூ.2.52 கோடி அபராதம் வசூல்!

இந்த சூழலை இப்படியே தக்க வைக்கும் பொருட்டு, மாஸ்க் அணியாமலோ அல்லது சமூக இடைவெளி பின்பற்றாமலோ செல்லும் நபர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் வசூலித்து வருகின்றனர். பொதுமக்கள் மட்டும் அல்லாது கடைகள், உணவகங்கள், நிறுவனங்கள் என எல்லாவற்றுக்கும் இதே நடைமுறை தான்.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நபர்களிடம் இருந்து ரூ.2.52 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பெரும்பாலும் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு தான் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.