‘2.0’ டிரைலர் இன்று வெளியாகிறது!

 

‘2.0’ டிரைலர் இன்று வெளியாகிறது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடித்துள்ள ‘2.0’ திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘2.0’ படத்தின் டிரைலர் இன்று நண்பகல் 12 மணிக்கு ரிலீசாகவுள்ளது. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தி டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி, நீரவ் ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் 4டி எஸ்.எல்.ஆர் சவுண்ட் சிஸ்டம் குறித்து இயக்குநர் ஷங்கரும், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டியும்ம் விளக்கினர். இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத புதுவிதமான டிஜிட்டல் சவுண்ட் சிஸ்டத்தில் ’2.0’ பட டீசர் காட்சிகள் சில திரையிடப்பட்டு பார்வையாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

ஏற்கனவே 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு புதுவித விஷுவல் ட்ரீட் கொடுத்த நிலையில், டிரைலரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.