2-வது திருமணம் செய்து கொண்ட தாய்: ஏழு ஆண்டுகளுக்கு பிறகு குத்தி கொலை செய்த மகன்!?

 

2-வது திருமணம் செய்து கொண்ட தாய்: ஏழு ஆண்டுகளுக்கு பிறகு குத்தி கொலை செய்த மகன்!?

தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்திலிருந்த மகன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தாயை  குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாய் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்திலிருந்த மகன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தாயை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் அன்பு – பவானி  தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்துள்ளனர். அன்பு கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துள்ளார். இதன் பிறகு பாவனிக்கு ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு பவானி  ராஜாவை 2-வதாக திருமணம்  செய்து கொண்டு நடுவீரப்பட்டு என்ற ஊருக்கு சென்று விட்டார். பிள்ளைகள் மூவரும் அவர்களது தந்தை வழிபாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளனர். 

murder

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பவானி  மற்றும் அன்பு இருவரும் இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டில் வசிக்கும் மகளை பார்க்க வந்துள்ளார். இதையடுத்து மகளைப் பார்த்து விட்டு மீண்டும் மண்ணிவாக்கம் சாலை வழியாக நடுவீரப்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார்கள். 

அப்போது தாய் இருசக்கர வாகனத்தில்  இரண்டாவது கணவருடன் செல்வதைப் பார்த்த பாவனியின் மூத்த மகன் சம்பத் அவர்களை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். இதையடுத்து வண்டியில்  வைத்து இருந்த ஸ்குரூடிரைவரை எடுத்து தாய் பவானியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் பவானி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

murder

இது குறித்துத் தகவலறிந்த போலீசார், பவானியின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவான மகன் சம்பத்தையும் கைது செய்தனர். 

இந்த கொலை சம்பவம் குறித்து சம்பத் அளித்துள்ள வாக்குமூலத்தில், என் அப்பா இறந்த சில மாதங்களிலேயே அம்மா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். நான் என் தம்பி மற்றும் தங்கை மூவரும் பாட்டி  வீட்டில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். அப்போதெல்லாம் பார்க்க வராத அவர், 7 ஆண்டுகள் கழித்து எதற்கு வர வேண்டும். அதனால் தான் குத்தினேன்’ என்று தெரிவித்துள்ளார். தாயை  மகனே குத்தி கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.