+2 பாடத்திட்டத்தில் நடிகர் திலகம்! அரசுக்கு பாரதிராஜா நன்றி!

+2 பாடத்திட்டத்தில் நடிகர் திலகம்! அரசுக்கு பாரதிராஜா நன்றி!

சிவாஜி கணேசனின் திறன், பெற்ற விருதுகள், அவரின் கலை உலக அனுபவங்கள் என விவரிக்கப்பட்டுள்ள இந்த நூல், இந்தாண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் அவர்களுக்கு புகழ் சேர்க்கும் விதமாக அவரைப்பற்றிய நூலை பாடநூலில் சேர்த்த தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக அக்கடிதத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் பாலசந்திரன் கள்ளிக்காடு அவர்களால் எழுதப்பட்ட நூலை கே.வி. ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்துள்ள்ளார். சிவாஜி கணேசன் குறித்த தகவல்கள் அடங்கியுள்ள‌ இந்நூல், +2 பாடத்திட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

Chidamabara Ninaivugal

இச்செய்தி அறிந்த இயக்குநர் இமயம், அரசின் இச்செயலைப் பாராட்டி, கடிதம் எழுதியுள்ளர். அக்கடிதத்தில்: உலகின் மாபெரும் கலைஞன், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் மூலம் நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி என்று மக்களால் அழைக்கப்பட்ட சிவாஜி கணேசன் அவர்களை பற்றி மலையாள எழுத்தாளர் பாலசந்திரன் கள்ளிக்காடு ‘சிதம்பர நினைவுகள்’ என்ற நூலை வெளியிட்டார்.

Sivaji Ganesan