2 டாய்லெட்தான் 400 பேருக்கா? அமைச்சரை வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி…

 

2 டாய்லெட்தான் 400 பேருக்கா? அமைச்சரை வெளுத்து வாங்கிய மம்தா பானர்ஜி…

மேற்கு வங்கத்தில், ஹவுரா சேரியில் 400 பேர் வசதிக்கும் பகுதியில் 2 டாய்லெட் மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, நகர மேம்பாட்டு துறை அமைச்சருக்கு கடும் டோஸ் விட்டார்.

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், தற்போதை முதல்வருமான மம்தா பானர்ஜி. தற்போது மம்தா பானர்ஜிக்கு பா.ஜ. கடும் போட்டி கொடுத்து வருகிறது. அதனால் ஏதாவது செய்து மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த மம்தா நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

மம்தா பானர்ஜி

அதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளில் அவர் செய்யாத செயல் ஒன்றை மம்தா நேற்று செய்தார். நிர்வாக கூட்டத்துக்கு செல்லும் வழியில் ஹவுரா மாநகராட்சி பகுதியில் உள்ள சேரி அருகே காரை நிறுத்த சொல்லி அந்த சேரிக்குள் சென்று மக்களை சந்தித்து பேசினார். 400 பேர் வசிக்கும் அந்த பகுதியில் மொத்தமே 2 டாய்லெட் இருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து நிர்வாக கூட்டத்தில் அம்மாநில நகர்புற மேம்பாட்டு மற்றும் உள்ளாட்சி விவகார துறை அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் மற்றும் மாநில அமைச்சர் மற்றும் ஹவுரா மாவட்ட திரிணாமுல் கட்சி தலைவர் அரூப் ராய் ஆகியோருக்கு சேரி விவகாரம் தொடர்பாக கடும் டோஸ் விட்டார்.

அப்போது, ஹக்கீம் நான் நிர்வாக கூட்டத்துக்கு செல்லும் வழியில் சேரிக்கு சென்று பார்வையிட்டேன். அப்போது உங்களது துறை அதிகாரிகள் என்னிடம் 400 பேர் வசிக்கும் அந்த இடத்தில் 2 டாய்லெட் மற்றும் பாத்ரூம்கள் மட்டுமே இருப்பதாக கூறினர். ஏன்? நாம் சேரி மேம்பாட்டுக்கு பணம் கொடுக்கிறோம். யார் இந்த பகுதி கவுன்சிலர்? அவர் என்ன செய்கிறார் என்று ஹக்கீமிடம் கேட்டார். அப்போது நீண்ட மவுனம் நிலவியது. பின் அந்த பகுதி திரிணாமுல் கவுன்சிலர் கொலை வழக்கில் 2017ம் ஆண்டு சிறையில் இருப்பதாக ஒருவர் கூறினார்.

ஹக்கீம்

உடனே மம்தா, கவுன்சிலர் ஜெயில் இருக்கிறார். ஆனால் நகராட்சி இங்கதான இருக்கு. இது  நிர்வாகத்தின்கீழ் உள்ளது. இந்த வார்டுகளை நீங்க ஏன் ஆய்வு செய்யல? நீங்கள் இன்னும் 7 நாட்களில் அதனை குடிசை பகுதிகளையும் பார்வையிட்டு அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என நான் உங்களுக்கு உத்தரவிடுகிறேன். 

குறைந்தபட்சம் 6 அல்லது 8  பாத்ரூம்கள் வழங்குவதில் என்ன பிரச்சினை? 400 பேருக்கு 2 டாய்லெட் என்பதை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா? இதை நிலை உங்கள் வீட்டில் இருந்தால் என்ன செய்வீர்கள்? ஏதாவது வழி இருந்தால் அதனை நாம் ஏன் வழங்க முடியாது. நகராட்சி தற்போது நிர்வாகத்தின்கீழ் உள்ளது. அதனால் உங்களது பணியை உடனடியாக தொடங்குங்கள் என அறிவுறுத்தினார். மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்,ஏ.க்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அனைவரும் சேரி பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேளுங்கள் என்றும் மம்தா அறிவித்தினார்.