2ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம் தீட்டியுள்ள பிரபல நிறுவனம்: அதிர்ச்சியில் ஊழியர்கள்!?

 

2ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம் தீட்டியுள்ள பிரபல நிறுவனம்: அதிர்ச்சியில் ஊழியர்கள்!?

இதனால் ஐடி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

இந்திய பொருளாதாரம் மந்தநிலையை எட்டியுள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் நெருக்கடியான சூழலை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

ttn
அந்தவகையில் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ஓயோ நிறுவனமும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்துள்ளதாம். இதற்கு காரணம்  நடப்பு ஆண்டில் அந்த நிறுவனத்திற்கு சுமார்  2384 கோடி ரூபாய்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது தான் என்று கூறப்படுகிறது.

ttn

இது கடந்த ஆண்டைவிட 6 மடங்கு அதிகமாம்.   இதனால் அடுத்த மாதம்  2000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து  அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.