வைகோவை விடுதலை செய்யக்கோரும் திருமா

 

வைகோவை விடுதலை செய்யக்கோரும் திருமா

இலங்கை தீவில் யாழ்ப்பாணத்தின் பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் மற்றும் நினைவு முற்றத்தினை இரவோடு இரவாக சிங்கள அரசு உத்தரவின் பேரில் ராணுவத்தினர் இடித்து தள்ளி இருக்கிறார்கள்.

வைகோவை விடுதலை செய்யக்கோரும் திருமா

இனப்படுகொலை செய்த அரசு படுகொலயின் அடையாளங்களை கூட இருக்க கூடாது என்பதற்காக முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்துள்ளது இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

இந்த சம்பவத்தை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தினை இன்று காலை 11 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வைகோவை விடுதலை செய்யக்கோரும் திருமா

சென்னையில் இன்று நடந்த சிங்கள துணை தூதரகத்தை முற்றகையிடும் அறப்போரில் வைகோ, இரா.முத்தரசன், வன்னி அரசு, வ.கவுதமன், வேல்முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

வைகோ தலைமையில் கைது செய்யப்பட்ட யாவரையும் தமிழக அரசு உடனே விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான பொய்வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி இருக்கிறார் .