விந்தணுக்கள் மூலம் கொரோனா பரவாது: ஆனால்.. சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்

விந்தணுக்கள் மூலம் கொரோனா பரவாது: ஆனால்.. சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்

கொரோனா பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் சொன்ன சுகாதாரத்துறை, உடலுறவு வைத்துக்கொள்ளலாமா என்பது பற்றிய அறிவிப்பை எதுவும் சொல்லவில்லை. இதனாலேயே பலரும் பயந்துபோய் உறவு வைத்துக்கொள்ளாமலே இருப்பதாக தகவல் பரவுகிறது.

விந்தணுக்கள் மூலம் கொரோனா பரவாது: ஆனால்.. சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்

மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டும், ஆறு மாதங்களுக்கு மேலாக முதலிரவு வேண்டாம் என்று தள்ளிபோட்டுக்கொண்டே வந்திருக்கிறார். கொரோனா பயத்தினால் முதலிரவை மட்டுமல்ல, மனைவியை தொட்டு பேசுவதையே தவிர்த்து வந்திருக்கிறார். ஏதாவது பேசினாலும் தூரத்தில் நின்றுதான் பேசி வந்திருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்து அரண்டு போன புதுப்பெண் கதறியபடி போலீசுக்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகமாக இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

அதில், பெட்ரூமுக்குள்ளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். ஆனாலும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்கிறார்கள்.

விந்தணுக்கள் மூலம் கொரோனா பரவாது: ஆனால்.. சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்

அதாவது, விந்தணுக்கள் மூலமாக கொரோனா பரவுவது இல்லை. அதனால் தம்பதிகள் தாராளமாக உடலுறவு வைத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் மூச்சுக்காற்றின் நீர்த்துகள்கள் மற்றும் எச்சில் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என்பதால் உடலுறவின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.