கனிமொழி வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்… ஆத்திரத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம்

கனிமொழி வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்… ஆத்திரத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம்

பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் பல முக்கிய பிரமுகர்களையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கோவை மாவட்டம் பொள்ளாட்சியில் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

கனிமொழி வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்… ஆத்திரத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம்

போலீசார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்தனர். ஆனாலும் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் அவர்களை போலீசார் தடுத்தனர்.

இந்நிலையில், போராட்டத்திற்கு வரும் திமுகவினரையும், தன்னையும் வாகனத்தை மறித்து போலீஸ் தடுப்பதாக கனிமொழி தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கனிமொழி வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீஸ்… ஆத்திரத்தில் சாலையில் அமர்ந்து போராட்டம்

’’பொள்ளாச்சி பாலியல் வன்முறை கொடூரத்தை கண்டித்து இன்று திமுக சார்பாக நடைபெற இருக்கும் போராட்டத்திற்கு வரும் பெண்களையும் கழக தொண்டர்களையும் ஆங்காங்கே போலீசார் வழிமறித்து திருப்பி அனுப்புவதாக தகவல் வந்து கொண்டே இருக்கிறது. எங்கள் வாகனங்களையும் நிறுத்தினார்கள். போலீசாரின் இச்செயலை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் செய்கிறேன்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.