முதல்வருடன் சாலையில் படுத்து தூங்கும் அமைச்சர்கள்… இந்த வருட போராட்டத்திற் காவது பலன் இருக்குமா?

 

முதல்வருடன்  சாலையில் படுத்து தூங்கும் அமைச்சர்கள்… இந்த வருட போராட்டத்திற் காவது பலன் இருக்குமா?

போனவருடம் சாலையிலேயே அமர்ந்து சாப்பிட்டு அங்கேயே படுத்து தூங்கி போராட்டம் நடத்தியது போலவே இந்த வருடமும் போராட்டம் நடத்தி வருகிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரிஅரசில் அம்மாநில ஆளுநர் கிரண்பேடியின் தலையீடு அதிகமாக இருக்கிறது. அதனால் அரசு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை என்று அம்மாநில முதல்வர் நாராயணமாமியும், கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். பல்வேறு வகையிலும் போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும், இந்த பிரச்சனையும் ஓய்வதாக தெரியவில்லை.

முதல்வருடன்  சாலையில் படுத்து தூங்கும் அமைச்சர்கள்… இந்த வருட போராட்டத்திற் காவது பலன் இருக்குமா?

திரும்பிப்போ கிரண்பேடியே என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலையில் அமர்ந்து சாப்பிட்டு அங்கேயே தூங்கும் போராட்டத்தினை நடத்தி வருகிறார்கள். முதல்வர் நாராயணசாமியுடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

சாலையில் தார்பாய் விரித்து அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மூன்று நாட்கள் நடைபெறூம் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சியினருக்கு பூரி, பானிபூரி, ஆம்லெட், சாப்பாடு வழங்கப்படுகிறது.

200க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும் போலீசாரும் இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முதல்வருடன்  சாலையில் படுத்து தூங்கும் அமைச்சர்கள்… இந்த வருட போராட்டத்திற் காவது பலன் இருக்குமா?

ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வரும் முதல்வர் நாராயணசாமி, கடந்த வரும் பிப்ரவரி மாதத்தில் ஐந்து நாட்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அப்போதும் அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

போன வருட போராட்டத்திற்கு எந்த பலனும் இல்லாமல் போய்விட்டது. இந்த வருட போராட்டத்திற்காவது பலன் இருக்குமா? என்பதே புதுவை மக்களின் கேள்வியாக இருக்கிறது.