தலித் பெண் விவகாரம் … கலக்கத்தில் ஸ்டாலின்

 

தலித் பெண் விவகாரம் … கலக்கத்தில் ஸ்டாலின்

திமுக சார்பில் கோவை தொண்டாமுத்தூரில் நடந்த கிராம மக்கள் சபை கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான கேள்விகளை கேட்டார்.

தலித் பெண் விவகாரம் … கலக்கத்தில் ஸ்டாலின்

முன்கூட்டியே சொல்லிவைத்து, குறிப்பிட்ட ஆட்களிடம் மட்டுமே பேசி வந்த ஸ்டாலின், பூங்கொடியின் திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து போனார். இதனால் கூட்டத்தில் இருந்தவர்கள் அந்தப்பெண்ணை அப்புறப்படுத்தினர். இதில் அந்தப்பெண் தாக்கப்பட்டதாவும், அதன் பின்னர் போலீசார் வந்து மீட்டு , அப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுப்பிய ஆள்தான் அது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அப்பெண் அதிமுக நிர்வாகி என்றும் திமுகவினர் ஆதாரங்களை கொட்டினர். ஆனால், அப்பெண் விசிகவில் இருந்தவர் என்றார் அமைச்சர்.

தலித் பெண் விவகாரம் … கலக்கத்தில் ஸ்டாலின்

அப்பெண் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் என்றும், தலித் சமுதாய பெண்ணை தாக்கிய ஸ்டாலின் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் புகார் தரப்படுள்ளது.

தலித் பெண் விவகாரம் … கலக்கத்தில் ஸ்டாலின்

இந்த புகார் மனுமீது நடவடிக்கை எடுத்து பதிலளிக்க வேண்டுமென்று தமிழக டிஜிபி, கோவை டிஎஸ்பிக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ அனுப்பியிருக்கிறது. இதனால், ஸ்டாலின் கலக்கத்தில் இருப்பதாக தகவல்.