அமைச்சர் சொன்னதை அப்படியே நிரூபித்த சங்கத்தமிழன்!

 

அமைச்சர் சொன்னதை அப்படியே நிரூபித்த சங்கத்தமிழன்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 2500 ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை கொண்ட பொங்கல் பையினையும், ஒரு முழு கரும்பும் வழங்கி வருகிறது தமிழக அரசு.

முன்னதாக இந்த இலவசத்தை பெறுவதற்காக, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.

அமைச்சர் சொன்னதை அப்படியே நிரூபித்த சங்கத்தமிழன்!

கடந்த மூன்றாம் தேதி இரவு திண்டுக்கல் மாவட்டம் கோம்பையான்பட்டியில் நடந்த தமிழக அரசு மினி கிளினிக் திறப்பு விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்று பேசினார்.

அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து ஒருவர், ‘’எனக்கு இன்னும் டோக்கன் வரல..’’ என்று சத்தமாக சொன்னார்.

உடனே அமைச்சர், ‘’இந்த டாஸ்மாக்கோட பெரிய கொடுமையா போச்சு… எப்படி எல்லாம் கேட்குறார் பாருங்கா..’’ என்று சொல்லிவிட்டு,

‘’இவருக்கு கொடுக்குற காசு டாஸ்மாக் மூலமா இங்கதான் வரும். எங்கேயும் போகாது… அரசாங்க பணம் திரும்பவும் அரசாங்கத்துக்கே வந்துடும். கரும்பும், பொங்கல் பையும் அவரோட மனைவிக்கு போயிடும்’’ என்றதும், கூட்டம் கலகலவென்று சிரித்தது.

அமைச்சர் சொன்னதை அப்படியே நிரூபித்த சங்கத்தமிழன்!

‘குடி’மகன்களுக்கு கொடுக்கும் 2500 ரூபாயும் மீண்டும் அரசுக்கே வரும் என்று அமைச்சர் சொன்னதை ஒரு ‘குடி’மகன் அப்படியே நிரூபித்திருக்கிறார்.

ரேசன் கடையில் பொங்கல் பை, கரும்புடன் 2500 ரூபாயினை வாங்கிய அந்த சங்கத்தமிழன், நேரடியாக டாஸ்மாக் சென்று சரக்கு வாங்கும் போட்டோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த மேடையில் அமைச்சர் பேசும்போது, ’’நான் தானே அப்பவே சொன்னேனே… ’’என்று சொல்லப்போகிறார்.