’’அதை நீங்கள் அமித்ஷாவிடம்தான் கேட்க வேண்டும்…’’ அமைச்சர் செல்லூர் ராஜூ

 

’’அதை நீங்கள் அமித்ஷாவிடம்தான் கேட்க வேண்டும்…’’ அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை சென்மேரிஸ் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பொங்கல் பரிசை முதலில் கொடுத்தது திமுகதானே என்றும், பொங்கல் பையில் அதிமுவினர் படம் அச்சிடப்பட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.

’’அதை நீங்கள் அமித்ஷாவிடம்தான் கேட்க வேண்டும்…’’ அமைச்சர் செல்லூர் ராஜூ

அதற்கு அமைச்சர், ‘’பொங்கல் பரிசாக திமுக வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது. ஆனால், அதிமுக அரசு 5 ஆயிரம் கோடிகள் வழங்கி இருக்கிறோம்.

திமுக கொடுத்த பொங்கல் பரிசில் அரைகிலோ அரிசியும் அரை கிலோ மண்ட வெள்ளம் இருந்தது. பணம் எதுவும் கொடுக்கவில்லை’’ என்றவர்,

‘’திமுக கொடுத்த பொங்கல் பரிசு பையில் உதயசூரியன் சின்னம் தான் இருந்தது. நாங்கள் இரட்டை இலை சின்னத்தை வைக்கவில்லை’’ என்றார்.

கமல்ஹாசனின் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு, ‘’உலகமே போற்றும் ஒரு நடிகர் அவர் நமக்கு தேவை’’என்றார். மேலும், ‘’தேர்தலையும் ஒரு ஷுட்டிங் போலவே அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். ஷூட்டிங் முடியும் வரை அவர் பேசிக்கொண்டே இருப்பார்’’என்றார்.

’’அதை நீங்கள் அமித்ஷாவிடம்தான் கேட்க வேண்டும்…’’ அமைச்சர் செல்லூர் ராஜூ

வரும் 14ம் தேதி சென்னை வரும் அமித்ஷா, கூட்டணி குறித்து பேசுவாரா? என்ற கேள்விக்கு, ‘’சென்னை வரும் அமித்ஷா கூட்டணி பற்றி பேசுவாரா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை…’’என்றார்.

மீண்டும் அமித்ஷா கூட்டணி பேச்சு நடத்துவாரா? என்பது குறித்து கேட்க, ‘’அதை அவரிடம்தான் நீங்கள் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்’’என்றார்..