ஜான்பாண்டியன்… திகுதிகு திருவாடனை

 

ஜான்பாண்டியன்… திகுதிகு திருவாடனை

அன்றைக்கு ஜெயலலிதா என்ன மூடில் இருந்தாரோ தெரியவில்லை. மரியாதை நிமித்தமாக சந்தித்துவிட்டு வரலாமென்றுதான் போனார் கருணாஸ்.

தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட சொல்லுவார் ஜெயலலிதா என்றுதான் வெளியே நின்றிருந்தவர்களூம் நினைத்திருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் திருவாடனை தொகியில் நிற்க சீட் கொடுத்து அனுப்பிவிட்டார் ஜெயலலிதா.

ஜான்பாண்டியன்… திகுதிகு திருவாடனை

திருவாடனை தொகுதி தனக்குத்தான் ஒதுக்கப்படும் என்று நினைத்திருந்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியனுக்கு ஒரே அதிர்ச்சி. ஜெ., ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை யாரால்தான் மாற்றமுடியும்.

சீட் கிடைத்ததோடு அல்லாமல், தனது முக்குலத்தோர் புலிப்படை கட்சி சின்னத்தில் நிற்காமல் இரட்டை இலை சின்னத்தில் நின்று 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஜெ., மறைவுக்கு பின்னர் கூவத்தூர் விவகாரத்தில் சசிகலாவுக்கு பக்க பலமாக நின்றவர் கருணாஸ். கூவத்தூர் பங்களாவை சசிகலாவுக்கு அடையாளம் காட்டியவரே கருணாஸ்தான். இதை அவரே சொல்லி இருக்கிறார்.

ஜான்பாண்டியன்… திகுதிகு திருவாடனை

தனியரசு, தமிமுன் அன்சாரியோடு தனியாக ஒரு அணியினையும் அமைத்துக்கொண்டு, அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வரும் கருணாஸ் மீது எடப்பாடிக்கும் அதிருப்தி இருக்குதாம். சசிகலா விடுதலையாகி வந்தால் அவர் பக்கம் நிச்சயம் போய்விடுவார் என்ற பேச்சும் இருப்பதால், அவருக்கு இந்த முறை அதிமுகவில் சீட் கொடுப்பது என்பது இயலாத காரியம் என்கிறார்கள்.

ஆனாலும், கருணாஸின் ஆதரவாளர்கள் இந்த முறையும் சீட் வாங்கி இரட்டை இலை சின்னத்திலேயே நிற்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.

ஜான்பாண்டியனுக்கு இந்த திருவாடனை தொகுதியை தரச்சொல்லி அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதோடு அல்லாமல், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சிலரே, ஜான்பாண்டியினை எடப்பாடியாரிடம் சிபாரிசு செய்திருக்கிறார்களாம்.

எடப்பாடியும் அதற்கு சம்மதித்துள்ளதோடு, இரட்டை இலை சின்னத்தில் நிற்கலாம் என்றும் கண் அசைத்திருக்கிறாராம்.

ஜான்பாண்டியன்… திகுதிகு திருவாடனை

இரட்டை இலை சின்னத்தில் நின்றதால்தான் கருணாஸ் வெற்றி பெற்றார். அதுபோலவே இந்த முறை ஜான் பாண்டியன் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுவிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

மீண்டும் குறிவைத்து காத்திருக்கிறார்கள் கருணாஸ் ஆதரவாளர்கள். அதனால், இப்போதே திகுதிகுவென்று இருக்கிறது திருவாடனை.