மீண்டும் வேறு பெயரில் களமிறங்கும் பப்ஜி – குடியரசு தினத்தில் அறிமுகம் !

 

மீண்டும் வேறு பெயரில் களமிறங்கும் பப்ஜி – குடியரசு தினத்தில் அறிமுகம் !

இந்தியாவின் மீண்டும் பப்-ஜி விளையாட்டு அறிமுகமாக உள்ளது. இளைஞர்கள் பப்-ஜி விளையாட்டுக்கு அடிமையாவதால், அவர்கள் மன அழுத்த நோய்களுக்கு ஆளாவதாகக் கூறி பப்-ஜி விளையாட்டுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்திய இளைஞர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதற்கு பப்-ஜி விளையாடுவதற்கு பப்-ஜி விளையாட்டு காரணகாக இருந்தது. இதனால் பப்-ஜி விளையாட்டு விளையாடுபவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளானதுடன், வன்முறை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தன.

மீண்டும் வேறு பெயரில் களமிறங்கும் பப்ஜி – குடியரசு தினத்தில் அறிமுகம் !

இதனால் இந்தியா முழுவதும் பப்-ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் பப்-ஜி உள்ளிட்ட 18 ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன.

பப்-ஜி விளையாட்டை இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். சுமார் 3.50 கோடி பேர் தொடர்ச்சியாக பயன்படுத்தும் பயனாளிகளாக இருந்தனர். இந்த செயலிகளை விளையாடுகள் சிறுவர்கள் தங்களது பெற்றோரின் வங்கிக் கணக்குகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணத்தை இழப்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில்தான் தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது அறிமுகமாக உள்ள பப்-ஜி விளையாட்டில், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக புதிய அம்சங்கள் இருக்கும். அதற்கேற்ப பெயரும் FAUG என மாற்றப்பட்டுள்ளது. தற்போது அறிமுகமாக உள்ள விளையாட்டில் முறையற்ற வன்முறைக்கு பதிலாக, ராணுவ வீரர்கள் சண்டை போடுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்லையில், இந்திய ராணுவ வீரர்கள் அந்நிய நாட்டு வீரர்களை தாக்கி, வெற்றி பெறுவதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வேறு பெயரில் களமிறங்கும் பப்ஜி – குடியரசு தினத்தில் அறிமுகம் !

இந்த புதிய பப்-ஜி விளையாட்டு வரும் குடியரசு தினத்தன்று அறிமுகமாக உள்ளது. இது தொடர்பாக அறிவிப்பினை இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பப்-ஜி மோகம் காரணமாக இளைஞர்களின் செயல்திறன் குறைகிறது என அந்த விளையாட்டை தடை செய்யும்போது மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆனால் அதையே எல்லையில் இந்திய வீரர்கள் , அந்நிய நாட்டு வீரர்களை தாக்குவது போல வடிவமைத்ததன் மூலம் தேசபக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த விளையாட்டை தரவிறக்கம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பப்-ஜி மோகத்தை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், எந்த வழியிலாவது வரத்தானே செய்வார்கள். இந்த முறையாவது மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!