அது ஐபேக் இயக்கும் நாடகம் என்று ஸ்டாலினே ஒத்துக்கொள்கிறார் போலும்… அண்ணாமலை

 

அது  ஐபேக் இயக்கும் நாடகம் என்று ஸ்டாலினே ஒத்துக்கொள்கிறார் போலும்… அண்ணாமலை

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்துரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திமுகவுக்காக அரசியல் வேலைகளை செய்துவரும் ஐபேக் இதை ஏற்பாடு செய்திருந்தது. அப்போது பேசிய ஸ்டாலின், வேலுமணி உள்ளாட்சி அமைச்சரா? ஊழலாட்சி அமைச்சரா? என்று அதிமுக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளார்.

அது  ஐபேக் இயக்கும் நாடகம் என்று ஸ்டாலினே ஒத்துக்கொள்கிறார் போலும்… அண்ணாமலை

அப்போது திடீரென்று அனுமதி ஏதும் பெறாத பெண் ஒருவர் மைக்கைப் பிடுங்கிப் பேச முயற்சி செய்தார். அதற்கு ஸ்டாலின், நீங்க எந்த ஊர்? என்று கேட்க, ஊர் பேரே தெரியாம கூட்டம் நடத்துறீங்க? என்று திரும்ப கேட்டதால் அதிர்ந்த ஸ்டாலின், என் கிட்ட கொடுத்த பட்டியல்ல உங்க பெயர் இல்லை? நீங்கள் எந்த ஊர் என்று கேட்க?அதற்கு பதில் சொல்லாமல், வேறு ஏதோ பேச ஆரம்பித்தார் அந்தப் பெண்.

அப்பெண்ணின் செயலால் அதிர்ச்சி அடைந்த திமுகவினர், அவரை கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். கூட்டத்தில் வெளியேற்றப்பட்ட போது திமுகவினர் அவரை தாக்கினர். இதனால் போலீசின் பிடியில் இருந்து விசும்பிக்கொண்டே, திமுகவுக்கு எதிராக முழக்கமிட்டார்.

அது  ஐபேக் இயக்கும் நாடகம் என்று ஸ்டாலினே ஒத்துக்கொள்கிறார் போலும்… அண்ணாமலை

பின்னர் அந்தப்பெண், ஒருவருடன் செல்போனில் பேசினார். அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் பேசியதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த பெண் தன்னிடம் செல்போனில் பேசியதால் விபரம் கேட்டேன் என்றார்.

அந்த பெண் பூங்கொடி என்றும் அதிமுகவின் உறுப்பினர் என்றும் திமுகவினர் குற்றம்சாட்ட, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதை மறுத்தார்.

இது குறித்து தமிழக பாஜகவின் துணைத்தலைவர் அண்ணாமலை, ‘’திமுக தொப்பி அணிந்து ஒரு கிராமசபை கூட்டமா!? அது எப்படி மக்கள் சபை கூட்டமாகும்!?’’ என்று கேள்வி எழுப்பியவர், ‘’ஊடக வெளிச்சத்திற்காக மக்களை ஏமாற்றும் ஐபேக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நடக்கும் நாடகம் என்று ஸ்டாலின் அவரே ஒத்துக்கொள்கிறார் போலும்!’’என்று தெரிவித்துள்ளார்.